இந்திய கிராமத்தில் பஞ்சாயத் இடைக்காலத் தலைவராக இருந்த பாகிஸ்தான் பெண் மீது வழக்கு


இந்திய கிராமத்தில் பஞ்சாயத் இடைக்காலத் தலைவராக இருந்த  பாகிஸ்தான் பெண் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Dec 2020 7:42 AM GMT (Updated: 31 Dec 2020 7:42 AM GMT)

உத்தரபிரதேச கிராமம் ஒன்றில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் கிராம பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக இருந்து நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆக்ரா: 

உத்தரபிரதேச மாநிலம்  எட்டா மாவட்டத்தில் 65 வயதான பாகிஸ்தான் பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தின் விவகாரங்களை அதன் இடைக்காலத் தலைவராக இருந்து  நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது உள்ளூர் போலீசாரையும் நிர்வாகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 நீண்ட கால விசாவில் தங்கியிருந்தபோது அவருக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்கள் கிடைத்து உள்ளன. அது எவ்வாறு கிடைத்தன என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் பானோ பேகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் எட்டாவிலுள்ள தனது உறவினர் வீட்ற்கு வந்தார். பின்னர், அவர் உள்ளூர், அக்தர் அலி என்பவரை மணந்தார். அப்போதிருந்து, அவர் நீண்ட கால விசாவில் எட்டாவில் தங்கியிருந்தார், மேலும் பல முறை இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து உள்ளார்.

2015 உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களின் போது, குவாட் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பானோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி, பன்ச்ஜாயத்து தலைவர் ஷெஹ்னாஸ் பேகம் காலமானார். இதைதொடர்ந்து கிராமக் குழுவின் பரிந்துரையின் பேரில் பானோ  பேகம் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

பானோ ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று குவைதன் கான் என்ற கிராமவாசி புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

பானோ பதவியை ராஜினாமா செய்த போதிலும், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி (டிபிஆர்ஓ) அலோக் பிரியதர்ஷி இந்த விஷயத்தை எட்டாவின் மாவட்ட கலெக்டரிடம் சுக்லால் பாரதியிடம்  புகார் அளித்தா. அவர்  வழக்குப்பதிவு செய்ய ம்ற்றும் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

டிபிஆர்ஓ பிரியதர்ஷி கூறியதாவது:-

பானோ பேகம் மீது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையில் அவர் பாகிஸ்தான் நாட்டவர் என்பது கண்டறியப்பட்டது. மோசடியாக அவர் பெயரில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அடையும் பெற்று உள்ளார் என கூறினார்.

பானோவை கிராமக் குழுவின் தலைவராக நியமிக்கவும், அவரை இடைக்கால தலைவராக  நியமிக்கவும் பரிந்துரை செய்ததாக கிராமத்து செயலாளர் தியன்பால் சிங்  பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Next Story