தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் + "||" + #WATCH | Border Security Force (BSF) personnel celebrate #NewYear in Poonch, Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
ஸ்ரீநகர்,

2021 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக கூடும் இடங்களில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பொது இடங்களில் பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. இதனை கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், பாட்டு பாடி, நடனமாடி புத்தாண்டை கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
2. ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ
ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.
3. வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு காஷ்மீர் வருகை: இன்றும் நாளையும் ஆய்வு
குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் (பிஏஜிடி) தலைவரை தூதர்கள் சந்திப்பார்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
4. ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 4ஜி இணைய சேவை
ஜம்மு காஷ்மீரில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.