தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்


தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்
x
தினத்தந்தி 1 Jan 2021 9:51 PM GMT (Updated: 1 Jan 2021 9:51 PM GMT)

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு ரூ.15 கோடி அபராதம் விதித்து உள்ளது.

புதுடெல்லி,

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2007–ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ். நிறுவனம், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து உள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story