இந்து கோவில் சேதம்: பாகிஸ்தானிடம் எதிர்ப்பை தெரிவித்தது இந்தியா


இந்து கோவில் சேதம்: பாகிஸ்தானிடம் எதிர்ப்பை தெரிவித்தது இந்தியா
x
தினத்தந்தி 2 Jan 2021 3:02 AM GMT (Updated: 2 Jan 2021 3:02 AM GMT)

இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

புதுடெல்லி, 

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு இந்து கோவிலை விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கோவிலை தாக்கி சேதப்படுத்தியது. 

இது தொடர்பாக ஜமாயத் உலேமா-இ-இஸ்லாம் என்ற மதவாத கட்சி தலைவர் ரெகுமத் சலாம் கட்டக் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 350-க்கும் அதிகமான பேர் பதிவு செய்யப்பட்டனர். சேதமடைந்த கோவிலை திரும்ப கட்டவும் மாகாண அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது.


Next Story