தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து + "||" + Grave Violation": Court On Kangana Ranaut Merging Her Mumbai Flats

நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து

நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து
நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மும்பை, 

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் ஒரு பகுதியை சமீபத்தில் கோர்ட்டு அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5-வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும் ஒரே வீடாக மாற்றும் பணியை மேற்கொண்டார்.

இதில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு மும்ைப மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி நடிகை கங்கனா ரணாவத் மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிபதி எல்.எஸ். சவான் விசாரணை நடத்தினார். கடந்த வாரம் அவர் மனுவை தள்ளுபடி செய்தார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம் தற்போது தெரியவந்து உள்ளது. அதாவது, நடிகை கங்கனா ரணாவத் தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் மனுதாரர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கோவிஷீல்டு மருந்து தயாரிப்பாளர் ஆதார் பூனாவாலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மராட்டிய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிஷீல்டு மருந்து தயாரிப்பாளர் ஆதார் பூனாவாலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து பதில் அளிக்க மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு; தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் கட்டாயம்; மும்பை ஐகோர்ட்டு கருத்து
கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரிகள் சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வது கட்டாயம் என்று மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
3. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
4. புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் ‘திதா: தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
5. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.