புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி


புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 5 Jan 2021 5:21 AM GMT (Updated: 5 Jan 2021 11:25 AM GMT)

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடமும் மற்றும் வளாகங்களை அமைக்கும் பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை வரும் 2022-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்தத் திட்டத்திற்காக பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறாமல் உள்ளது எனவும், எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது எனக்கோரி ராஜீவ் சூரி, உள்ளிட்ட சிலர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கட்டிட  பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக அனைத்து அனுமதிகளும் உரிய முறையில் பெறப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story