தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை - விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி..! + "||" + West Bengal minister Laxmi Ratan Shukla resigns: Report

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை - விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி..!

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை - விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி..!
மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளதால் மம்தா பேனர்ஜி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
கொல்கத்தா


மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் இருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பும் விவகாரத்தில் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு முற்றியது. 

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மந்திரிசபையில் இருந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகினார்.திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.

தற்போது மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி ரத்தன்  சுக்லா ராஜினாமா செய்து உள்ளார்.சுக்லா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், \ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அனுப்பியுள்ளார்.

ஹவுரா மாவட்டத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கவனித்து வந்த சுக்லா, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சுக்லா  மாநில ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ப்டன் ஆவார்.

 சுக்லா ராஜினாமாவால் மம்தா பேனர்ஜி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2. தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் -மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்
தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. மேற்குவங்காள சட்டசபை தேர்தல்: நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது - மம்தா பானர்ஜி
சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
4. அரசியலுக்காக கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் -பிரதமர் மோடி
வாக்கு வங்கி அரசியலுக்காக தங்கள் கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை வங்க மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
5. நிலக்கரி ஊழல் வழக்கு : சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம்- அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா
நிலக்கரித் திருட்டு வழக்கில் விசாரணைக்காகத் தனது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம் என அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பதிலளித்துள்ளார்.