தேசிய செய்திகள்

காவிக்கொடிகளுடன் 4 வாலிபர்கள் நுழைந்த விவகாரம்: தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடா? மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் ஆய்வு + "||" + 4 teenagers enter with saffron flags: Is there a lack of security at the Taj Mahal? CISF inspect

காவிக்கொடிகளுடன் 4 வாலிபர்கள் நுழைந்த விவகாரம்: தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடா? மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் ஆய்வு

காவிக்கொடிகளுடன் 4 வாலிபர்கள் நுழைந்த விவகாரம்: தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடா? மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் ஆய்வு
காவிக்கொடிகளுடன் 4 வாலிபர்கள் நுழைந்த விவகாரத்தில் தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடா? என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

புதுடெல்லி,

காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் தாஜ்மகாலை காண கொரோனா ஊரடங்குக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாஜ்மகாலை காண சென்ற 4 இளைஞர்கள் திடீரென காவிக்கொடிகளை கையில் ஏந்தியபடி வீடியோ எடுத்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இதனால் தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு சென்று, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காவிக்கொடிகளுடன் வாலிபர்கள் நுழைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்து 2 அல்லது 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்’ என்று தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தை நேற்று தாக்குவதற்கு பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவு தகவல் வெளியானது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறி கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை எடுத்தது.
3. அபுதாபியில், கடல் பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்தன
அபுதாபியில் கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் தொடங்கி வைத்தார். அப்போது அமீரக விமானப்படை விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்து சென்றன.
4. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.
5. தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார்
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.