கேரளாவில் முன்னாள் மாநில மந்திரி கே.கே. ராமசந்திரன் காலமானார்


கேரளாவில் முன்னாள் மாநில மந்திரி கே.கே. ராமசந்திரன் காலமானார்
x
தினத்தந்தி 7 Jan 2021 5:14 AM GMT (Updated: 7 Jan 2021 5:14 AM GMT)

கேரளாவில் முன்னாள் மந்திரி கே.கே. ராமசந்திரன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியாக பதவி வகித்தவர் கே.கே. ராமசந்திரன்.  இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை காலமானார்.  அவருக்கு வயது 78.

கடந்த 1991ம் ஆண்டில் இருந்து கல்பேட்டா தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  ஏ.கே. அந்தோணி தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமை பொருள் வினியோக மந்திரியாக கடந்த 1995ம் ஆண்டிலும் மற்றும் உம்மன் சாண்டி அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக 2004ம் ஆண்டிலும் பதவி வகித்து உள்ளார்.

இதன்பின்னர் கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரசிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.  அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story