தேசிய செய்திகள்

ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை துவக்கி வைத்த ராஜ்நாத் சிங் + "||" + Rajnath Singh launches portal for online sale of electronic items through CSD canteens

ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை துவக்கி வைத்த ராஜ்நாத் சிங்

ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை துவக்கி வைத்த ராஜ்நாத் சிங்
ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,

ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேன்டீன் ஸ்டோர்ஸ் துறையின் கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை (https://afd.csdindia.gov.in/) மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்  தொடங்கி வைத்தார்.

தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 45 லட்சம் பயனாளிகள் கார்கள், இருசக்கர வாகனங்கள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்களைத் தங்கள் வீடுகளிலிருந்து சுலபமாகப் பெறும் நோக்கத்தில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியைப் பாராட்டிய மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த இணையதள திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவினரை அவர் பாராட்டினார்.‌ பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதாரத்தில் நாடு துரிதமாக மீண்டெழுந்தது - ராஜ்நாத் சிங்
பொருளாதாரம் சீரடைய ஒரிரு வருடங்களுக்கும் அதிகமாக ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், நாடு துரிதமாக மீண்டெழுந்தது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது; ராஜ்நாத் சிங்
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
3. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம் - ராஜ்நாத் சிங்
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
4. இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது - ராஜ்நாத் சிங்
இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
5. தசரா பண்டிகையையொட்டி ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23-24 தேதிகளில் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.