தேசிய செய்திகள்

கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது + "||" + 13.90 lakh corona vaccines are coming to Karnataka today

கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது

கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது
கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக மத்திய அரசு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கி உள்ளது. சனிக்கிழமை( இன்று) 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வருகிறது. 

முதல்கட்டமாக இவ்வளவு தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுப்போம். இந்த தடுப்பூசிகள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கியதும் கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

இதற்கிடையே, அதாவது சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கு இடையே தவறான புரிதல்கள் மற்றும் தவறான கணிப்புகளை களைவதற்காக கள மட்டத்திலான தொடர்புகளும் நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை
பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
2. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
3. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?
கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக பஸ் போக்கு வரத்து முடங்கியது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுடன் போக்கு வரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.
5. 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு
கர்நாடகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.