தேசிய செய்திகள்

லடாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது + "||" + Army apprehends PLA soldier on Indian side of LAC in Ladakh

லடாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது

லடாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி: 

கடந்த ஆண்டு இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவான பிறகு, இருநாட்டு எல்லைப் பகுதியிலும்  இரு நாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஜனவரி 8-ம் தேதி அதிகாலை, இந்திய - சீன எல்லையான லடாக் பகுதிக்கு அருகே தெற்கு பாங்காங் ஏரி பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால், சீன ராணுவ வீரர், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டிருக்கும் சீன வீரர், உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவார் என்றும், அவர் எல்லைத்தாண்டி வந்தது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 15 மணி நேரம் நீடித்த 9-வது கட்ட பேச்சுவார்த்தை படைகளை விலக்கி கொள்ள மீண்டும் சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
இந்தியா, சீனா எல்லை விவகாரம் காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணி வரை 15 மணி நேரம் நீடித்தது.