தேசிய செய்திகள்

ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 199 பேருக்கு தொற்று உறுதி + "||" + Declining corona impact in Andhra; Today 199 people are confirmed infected

ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 199 பேருக்கு தொற்று உறுதி

ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 199 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவில் இன்று 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,84,689 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 7,128 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 2,607 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 8,74,954 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை
ஆப்பிரிக்காவின் மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி ஆந்திரா சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
2. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,23,186 ஆக அதிகரித்துள்ளது.
3. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,492 பேருக்கு கொரோனா
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.
4. ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துள்ளது.
5. இத்தாலியில் 28 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இத்தாலியில் இதுவரை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.