மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது


மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 10 Jan 2021 12:14 PM GMT (Updated: 10 Jan 2021 12:14 PM GMT)

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்த 82 பேர் மண்ணில் புதையுண்டனர்.

இந்த சம்பவத்தில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் உயிரிழந்தனர். இதில் 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரின் உடல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 95 லட்சம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் கேரள அரசு செலுத்தியது. இந்த நிலையில் அதற்கான ரசீதை உரியவர்களிடம் கேரள வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் இன்று வழங்கினார்.

Next Story