தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு + "||" + Karnataka Chief Minister yediyurappa meets Union Minister Amit Shah

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில், பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கர்நாடக மாநிலத்தில் வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.