மாநில தலைவராக இருந்தபோதும் போது கூட பாதுகாப்பு கேட்க வில்லை - தேவேந்திர பட்னாவிஸ்


மாநில தலைவராக இருந்தபோதும் போது கூட பாதுகாப்பு கேட்க வில்லை - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 10 Jan 2021 4:06 PM GMT (Updated: 10 Jan 2021 4:06 PM GMT)

மாநில தலைவராக இருந்தபோதும் போது கூட பாதுகாப்பு கேட்க வில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ்ஸின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், மராட்டிய நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதே போன்று மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல், முன்னாள் பாஜக அமைச்சர் சுதீர் முன்கந்திவார் ஆகியோரின் பாதுகாப்பையும் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.      

இந்நிலையில் இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

நான் மாநில தலைவராக இருந்தபோதும் ஒருபோதும் பாதுகாப்பு கேட்கவில்லை. நான் முதல்வரானபோது முதல் முறையாக பாதுகாப்பை பெற்றேன். யாகூப் மேமனின் மரண தண்டனை மற்றும் பிற நிகழ்வுகளுக்குப் பிறகு எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது. அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் இது வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Next Story