தேசிய செய்திகள்

மும்பையில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தவ் தாக்கரே + "||" + Uttav Thackeray has expressed his condolences to the family of a child who died in a fire in Mumbai

மும்பையில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தவ் தாக்கரே

மும்பையில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தவ் தாக்கரே
மும்பையில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் உயிரிழந்தன.

மேலும் 7 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தை குடும்பத்தினர் வீட்டிற்கு முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்றார். அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் 9 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி; மேயர் தகவல்
மும்பையில் இன்று 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார்.
2. மும்பையில் ஓடும் டாக்சிகளில் 3 வண்ண இன்டிகேட்டர் பொருத்த மேலும் 6 மாதம் அவகாசம்
மும்பையில் ஓடும் டாக்சிகளில் 3 வண்ண இன்டிகேட்டர் பொருத்த மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
3. மும்பையில் ஜனவரி 15-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; மாநகராட்சி அறிவிப்பு
மும்பையில் ஜனவரி 15-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
4. மராட்டியத்தில் புதிதாக 2,498 பேருக்கு தொற்று; மும்பையில் 4-வது நாளாக 600-க்கு கீழ் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு 600-க்கு கீழ் உள்ளது.
5. மும்பையில் இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை; பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார்
மும்பையில் இரவு மேல் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.