மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு


மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்  - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 4:51 PM GMT (Updated: 10 Jan 2021 4:51 PM GMT)

மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கொரோனாவை தடுக்க இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி வருகின்ற 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோர் இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மேற்கு வங்க மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “கொரோனா தடுப்பூசியை நிர்வகிக்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசியை மாநில மக்கள் அனைவருக்கும் எந்தவித செலவும் இன்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை எங்கள் அரசாங்கம் செய்து வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் கூறுகையில்,

மம்தா பானர்ஜி மத்திய அரசின் திட்டங்களுக்கு மறுபெயரிட்டு அவற்றை தனது சொந்த பெயருக்குப் பிறகு செயல்படுத்த பார்க்கிறார்.

தடுப்பூசியை தேர்தலுக்கு முன்னதாக திகாஷ்ரீ அல்லது மமாதஸ்ரீ என்று பெயர் மாற்றுவதன் மூலம் அதை விளம்பரப்படுத்த விரும்புகிறார். இது தேவையில்லை என்றார்.

Next Story