மத்திய பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி


மத்திய பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி
x
தினத்தந்தி 10 Jan 2021 10:57 PM GMT (Updated: 10 Jan 2021 10:57 PM GMT)

மத்திய பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால், 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த மாத இறுதியில். இறந்து கிடந்த 50 காகங்களில் 2 காகங்களில் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை, 27 மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட காகங்களும், இதர பறவைகளும் இறந்து விட்டன. 

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில், 13 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகர் மால்வா மாவட்டத்தில் கோழிச்சந்தை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது. நீமூச், இந்தூர் ஆகிய மாவட்டங்களில் கோழி இறைச்சி கடைகளை ஒரு வாரத்துக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிகளை கொன்று புதைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story