தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை + "||" + Supreme Court issues notice to centre on farm laws, hearing on January 11:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக நீதிபதிகள் கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது- இந்த பின்னணியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இம்மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு எடுக்கப்போகும் நிலைப்பாடு, கவனத்தை ஈர்த்துள்ளது.

அதுபோல், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்படுகின்றன.விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய தனியுரிமை கொள்கை; வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
2. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
3. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.
4. டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுக்க கோரிய வழக்கில் டுவிட்டர் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5. தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது: விவசாய சங்க தலைவர் திகாய்த்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்திய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி சர்ச்சையை ஏற்படுத்தியது.