3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி


3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 Jan 2021 12:04 PM GMT (Updated: 11 Jan 2021 12:26 PM GMT)

3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றார்

அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது கூட்டாட்சிக்கு உதாரணமாக உள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்குகிறது. அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள், பாதுகாப்புப்படையினர், துனை ராணுவத்தினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும். 

முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும்.  இந்தியாவில் தயாரிக்கபப்ட்ட 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.  

கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும் போது அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story