கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனே நிறுவனத்தில் இருந்து வெளியேறும்


கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனே நிறுவனத்தில் இருந்து வெளியேறும்
x
தினத்தந்தி 11 Jan 2021 1:17 PM GMT (Updated: 11 Jan 2021 1:17 PM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனே சீரம் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனே

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை,  ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

தடுப்பூசி வந்த பின்னர் ஒரு  ரூ. 200 விலை நிர்ணயிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.முதல் 10 கோடி டோஸ்களுக்கு தலா  ரூ .200 விலை நிர்ணயிக்கப்படும் என்று சீரம் நிறுவன  வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

இந்த மருந்து இன்று இரவு அல்லது நாளை காலை சீரம்  புனே நிறுவனத்தில்  இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தடுப்பூசியின் ஏற்றுமதி ஜனவரி 16 க்குப் பிறகு எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story