தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி + "||" + Karnataka: Union minister Shripad Naik injured in road accident; wife dies

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் சாலை விபத்தில் பலியனார்கள்
அங்கோலா: 

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அவரது மனிவி மறும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை காரில் எல்லாப்பூரில் உள்ள காந்தே கணபதி கோயிலுக்கு சென்றனர். அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் கோவிலில் பூஜை செய்து பின்னர் இரவு 7 மணியளவில் கோகர்ணாவுக்குச் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் வந்த கார் கோகர்ணாவுக்கு குறுக்குவழி சாலையில் வந்து கொண்டு இருந்தது. சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் டிரைவர் வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்தது. ஹில்லூர்-ஹோசகாம்பி கிராமத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டது. இதில்  மத்திய அமைச்சர் மனனைவி விஜயா மற்றும் இரண்டு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை அங்கோலாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.ஆனால்  செல்லும் வழியில் மத்திய அமைச்சரின் மனைவி விஜயா மரணமடைந்தார். மேலும் அவரது உதிவியாளர் ஒருவரும் சிகிச்சி பலனின்று உயிரிழந்தார்.

மத்திய மந்திரி நாயக்கின் நிலைமை சீராக இருப்பதாகவும், அங்கோலாவில் முதற்கட்ட சிகிச்சையின் பின்னர் கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தர கன்னட போலீஸ் சூப்பிரெண்டு கூறியதாவது:-

 இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் தனிப்பட்ட உதவியாளர் இறந்தார்:  அமைச்சர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவரது மனைவி விபத்தில் காலமானார் என கூறினார்.

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜய நாயக்கின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார் என  கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.