ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 5.1 on the Richter scale occurred at 1932 hours in Jammu & Kashmir: National Center for Seismology
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று இரவு 7.32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.