கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம்; சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு


கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம்; சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2021 9:55 PM GMT (Updated: 11 Jan 2021 9:55 PM GMT)

கோவேக்சின் தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என சத்தீஷ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராய்ப்பூர், 

கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. 

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மனிதர்கள் வாழ்க்கையில் நாம் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது’ என்று கூறினார். ஒரு மாநில அரசே கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Next Story