எல்லை மோதலுக்குப் பின்னர் சீனா மீதான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்


எல்லை மோதலுக்குப் பின்னர் சீனா மீதான  நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது - வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 12 Jan 2021 10:03 AM GMT (Updated: 12 Jan 2021 10:03 AM GMT)

கடந்த கோடையில் நடந்த எல்லை மோதலுக்குப் பின்னர் சீனா மீதான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்தார்.


புதுடெல்லி: 

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டில் பேசும் போது கூறியதாவது:-

ஜூன் மாதத்தில் சீனாவுடனான பதற்றம் வெடித்தது, 20 இந்திய வீரர்கள் மிருகத்தனமான  சண்டையில் கொல்லப்பட்டனர்.  அதே நேரத்தில் மேற்கு இமயமலையில் எல்லையின் ஒரு சர்ச்சைக்குரிய பிரிவில் ஏற்பட்ட மோதலில் சீனா குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்தது.

இரு தரப்பினருக்கும் சர்ச்சையான  பகுதியில் இரு நாட்டு ராணுவ  வீரரகள் நிறுத்தபட்டு உள்ளனர்.  

45 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள்( சீனா ) உண்மையில் எல்லையில் இரத்தக்களரி ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அது பொதுவாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இப்போது கடந்த ஆண்டு, எங்களுக்குத் தெரியாத காரணங்களுக்காக, சீனா உண்மையிலேயே எல்லையின் ஒரு பகுதியில்  ஒரு பெரிய  இராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.  உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில், அவர்கள் வருவதைக் கண்டதும் நாங்கள் எதிர்வினையாற்றினோம். 

அமெரிக்காவுடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.  பைடன் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் அது முன்னேற்றம் அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. 

கட்டமைப்பு ரீதியாக அமெரிக்காவுடனான உறவு மிகவும் சிறப்பானது, இது மிகவும் தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது.  வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பைடன் நிர்வாகத்தின் எந்தவொரு சலுகை அல்லது அழைப்பிற்கும் இந்தியா சாதகமாக பதிலளிக்கும் என்று  கூறினார்.

Next Story