தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள் + "||" + All members of SC-appointed panel pro-govt, say farmers

சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்

சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்த மனு மீதான்  விசாரணையில் நேற்று  வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது என்றும், விவசாயிகளுடனான பேச்சு திருப்தி அளிக்கவில்லை என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின்  3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது .மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது  என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே  சுப்ரீம் கோர்ட்  அமைத்துள்ள குழுவில் இடம்  பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை.வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்  என கூறி உள்ளனர்.

 பாரதிய கிசான் யூனியன் பல்பீர் சிங் ராஜேவால் கூறும் போது

இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்னுமும்  நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நேற்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம்  வழக்கம் போல் தொடரும். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வந்தனர் என கூறினார்.

கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர், தர்ஷன் பால் கூறும் போது 

சுப்ரீம் கோர்ட்டால்  அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் மத்தியஸ்தத்திற்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி நேற்று இரவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டோம். சுமைகளை அவர்களின் தோள்களில் இருந்து எடுக்க சுப்ரீம் கோர்ட்  மூலம் ஒரு குழு அமைக்கப்படுவதாக  நாங்கள் நம்புகிறோம் என கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட விவசாயிகள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர்.
2. தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை - புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை
புதுக்கோட்டையில் தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மேட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - மராட்டியத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
4. விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டம் , ஒருவர் கைது
விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி திட்டம் ; விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல முயற்சி நடப்பதாக விவ்சாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர்.
5. 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு
விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.