கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை


கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில்  ரூ.1,000க்கு விற்பனை
x
தினத்தந்தி 12 Jan 2021 2:54 PM GMT (Updated: 12 Jan 2021 2:54 PM GMT)

இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் கூறி உள்ளது.


புனே

சீரம் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி  அடர் பூனாவாலா  கூறியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் எங்களுக்கு சவாலானது . ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.  ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்தார்.

Next Story