தேசிய செய்திகள்

மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்களிலும் கோ பூஜைகள் நடத்த திட்டம் + "||" + Plan to conduct Ko-Pujas in all the temples managed by Tirupati Devasthanam on Matu Pongal

மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்களிலும் கோ பூஜைகள் நடத்த திட்டம்

மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்களிலும் கோ பூஜைகள் நடத்த திட்டம்
மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் கோசாலைகளில் கோ பூஜைகள் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் இந்த சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

இதன்படி வரும் வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும். அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை 15-ந்தேதி அதிகாலையில் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாட்டுப் பொங்கல் நாளில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் கோசாலைகளில் கோ பூஜைகள் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.