தேசிய செய்திகள்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து + "||" + Greetings & best wishes to fellow citizens on Lohri, Makar Sankranti, Pongal, Bhogali Bihu, Uttarayan and Paush Parva President Kovind

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உழவுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உள்ளதுதான் பொங்கல் திருநாள்.

தை மாதத்தின் பிறப்புதான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகாலி பிஹு, உத்தராயண் மற்றும் பாஷ் பர்வா போன்ற பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கு வாழ்த்துக்கள். 

இந்த விழாக்கள் நம் சமுதாயத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.