மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு + "||" + Death toll rises to 20 in Madhya Pradesh in the matter of consumption of poisonous liquor
மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் நேற்று விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி மாநில மந்திரி நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காவல் நிலைய அதிகாரி உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.