தேசிய செய்திகள்

கோவாவிற்கு இன்று காலை சென்றடைந்த 23,500 கொரோனா தடுப்பூசிகள் + "||" + 23,500 corona vaccines arrived in Goa this morning

கோவாவிற்கு இன்று காலை சென்றடைந்த 23,500 கொரோனா தடுப்பூசிகள்

கோவாவிற்கு இன்று காலை சென்றடைந்த 23,500 கொரோனா தடுப்பூசிகள்
கோவாவிற்கு இன்று காலை 23,500 கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கோவா,

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

அந்த வகையில் கோவாவிற்கு முதற்கட்டமாக இன்று காலை 23,500 கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தகுந்த முறையில் பாதுகாக்கப்பட்டு, 24 மணி நேரங்களுக்கு முன்பாக தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் 23,871 பேருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
குமரி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 871 மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகத்தை முதன்மை கல்வி அதிகாரி ராமன் தொடங்கி வைத்தார்.
2. கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.