60 விவசாயிகள் இறந்தபோது வராதக் கவலை, டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருகிறது - ராகுல் காந்தி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Jan 2021 11:03 AM GMT (Updated: 13 Jan 2021 11:03 AM GMT)

60 விவசாயிகள் இறந்தபோது வராதக் கவலை, டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் நடந்து வரும் போராட்டமானது 50வது நாளை நெருங்கி உள்ளது. 

இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “60 விவசாயிகளின் இறப்புக்கு மத்திய அரசு வெட்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் மத்திய அரசு வெட்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.   

முன்னதாக கடந்த ஜனவரி 7-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story