தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் + "||" + Cabinet approves procurement of 83 Tejas fighter jets in Rs 48,000 cr deal

இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் 73 தேஜாஸ் எல்.சி.ஏ போர் விமானங்கள் மற்றும் 10 பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

இந்நிலையில் இந்திய ராணுவத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. தேஜஸ் எம்.கே-1 ஏ லைட் காம்பாட் விமானம் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில், “மத்திய அமைச்சரவை, ஐ.ஏ.எஃப் இன் உள்நாட்டு போர் விமானமான ‘எல்.சி.ஏ-தேஜாஸ்’ கடற்படையை வலுப்படுத்த சுமார் 48000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கைக்கு ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல்
கர்நாடகாவில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
2. இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி: நடவடிக்கைகள் தீவிரம்
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
3. இந்திய ராணுவம் சுட்டதாக சீனா அபாண்டம்: எல்லையில் மீண்டும் உச்சகட்ட பதற்றம்
இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து தங்கள் துருப்புகளை சுட்டதாக சீனா அபாண்ட பழி போட்டுள்ளது. இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.