அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார் ஜனாதிபதி


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட  ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார் ஜனாதிபதி
x
தினத்தந்தி 15 Jan 2021 10:50 AM GMT (Updated: 15 Jan 2021 10:50 AM GMT)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக 5 லட்சத்து 100 ரூபாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நன்கொடையாக அளித்தார்.

புதுடெல்லி,

அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைய இருக்கும்  ராமர் கோவிலுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் ராமர் கோவிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது கோவில் கட்டுமானத்திற்குக் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக அளித்தார்.


Next Story