கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை


கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jan 2021 2:48 PM GMT (Updated: 16 Jan 2021 2:48 PM GMT)

ன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா, 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 3,006 மையங்கள் மூலமாக  முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்திலும் முன்கள பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘முன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். 

மாநில அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என நினைக்கிறது. தேவைப்பட்டால் அதற்கான நிதிச்சுமையை தாங்க மேற்கு வங்காள அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.


Next Story