முதல் நாள் தடுப்பூசி கடந்த ஒரு வருடத்தில் இன்று நம் அனைவருக்கும் மிகப்பெரிய நிவாரண நாள்: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 16 Jan 2021 2:57 PM GMT (Updated: 16 Jan 2021 2:57 PM GMT)

முதல் நாள் தடுப்பூசி கடந்த ஒரு வருடத்தில் இன்று நம் அனைவருக்கும் மிகப்பெரிய நிவாரண நாள் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷில்டு’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  தொடங்கி வைத்தனர். 

இன்று நாடு முழுவதும் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு மாநிலங்களில் தாமதமானது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செவதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:-

சமூகத்தில் மக்களை தவறாக வழிநடத்த தடுப்பூசிகள், அவற்றின் பயன்பாடு, அவற்றின் பாதுகாப்பு பற்றி வதந்திகளை பரப்பும் ஒரு சிறிய பிரிவு உள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய மக்கள் இன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தடுப்பூசிகளைப் பெற்றனர், பிரபல மருத்துவர்கள் தடுப்பூசி பெற்றனர்.

கொரோனாவுக்கான  எதிரான போராட்டத்தில், தடுப்பூசிகள் நாடு முன் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிராக படிப்படியாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, இப்போது வெற்றி விரைவாக கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது

ஒரு வருடத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக  நமது  போராட்டத்தில் ஒரு அளவிற்கு வெற்றியைப் பெற்று உள்ளோம். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை அகற்றவும்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்

நாங்கள் (அமைச்சர்கள்) முன்னதாக தடுப்பூசிகளை எடுத்திருந்தால், மக்கள் முன் எங்களை பாதுகாத்துக் கொள்வதற்தாக  தடுப்பூசி போட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருப்போம்.

கடந்த 3-4 மாதங்களில் நமது கொரோனா பாதிப்பு குணமாகும் விகிதம் மற்றும் இறப்பு விகிதம்  ஆகியவை தரவுகள் மூலம்  நாம் படிப்படியாக  கொரோனாவுக்கு எதிரான வெற்றியை நோக்கி முன்னேறி வருவதைக் குறிக்கிறது.

சமூகத்தில் மக்களை தவறாக வழிநடத்த தடுப்பூசிகள், அவற்றின் பயன்பாடு, அவற்றின் பாதுகாப்பு குறித்த  வதந்திகளை பரப்ப ஒரு சிறிய பிரிவு உள்ளது. ஆனால் இவ்வளவு  மக்கள் இன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தடுப்பூசிகள் போட்டு உள்ளனர்.  பிரபல மருத்துவர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர் என கூறினார்.

Next Story