கொரோனா காலர் டியூன் மாற்றம்; அமிதாப்புக்கு பதில் பெண் குரல்


கொரோனா காலர் டியூன் மாற்றம்; அமிதாப்புக்கு பதில் பெண் குரல்
x
தினத்தந்தி 17 Jan 2021 12:48 AM GMT (Updated: 17 Jan 2021 12:48 AM GMT)

கொரோனா காலர் டியூனில் அமிதாப்புக்கு பதில் பெண் குரல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தது.

அந்த வகையில் நடிகர் அமிதாப்பச்சன் குரலுடன் கூடிய காலர் டியூன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசை எதிர்த்து போராடுகிறது என தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளை அமிதாப்பச்சன் விவரிப்பார்.  தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டில் வந்து விட்டது. இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்க்கும் வகையில் புதிய காலர் டியூன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அமிதாப்பச்சனின் குரலுக்கு பதிலாக ஒரு பெண்ணின் குரல் இடம் பெற்றுள்ளது. அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் பற்றி சொல்கிறார். அத்துடன் வதந்திகளை அகற்றவும் முயற்சிக்கிறார்.  புத்தாண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் வடிவில் நம்பிக்கையின் புதிய கதிரைக்கொண்டு வந்துள்ளது என்பது உள்ளிட்ட வாசகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படுகிற கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், வதந்திகளை நம்பக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story