தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை முதல் அமல் - மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை + "||" + Cow ban in Karnataka comes into effect from tomorrow - 7 years imprisonment for killing cows

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை முதல் அமல் - மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை முதல் அமல் - மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை
கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
பெங்களூரு,

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை நாளை (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பசுவதை தடை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு
கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். ரேஷன் கார்டுகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து மந்திரி உமேஷ் கட்டி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2. புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தல்; கர்நாடகத்தில் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியல்
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று கர்நாடகம் முழுவதும் விவசாயிகள் தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3. கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு, எடியூரப்பா உத்தரவு
கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
4. கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
5. கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை துரத்தி பிடித்த கல்வி மந்திரி; டிரைவர்-கண்டக்டருக்கு எச்சரிக்கை
துமகூரு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை கல்வி மந்திரி சுரேஷ்குமார், காரில் துரத்தி சென்று பிடித்தார். பின்னர் அவர் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டருக்கு எச்சரிக்கை விடுத்தார்.