தேசிய செய்திகள்

திரிபுரா காங். தலைவர் கார் மீது தாக்குதல்- பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு + "||" + Tripura Congress Chief's Car Attacked, Allegedly By BJP Supporters

திரிபுரா காங். தலைவர் கார் மீது தாக்குதல்- பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

திரிபுரா காங். தலைவர் கார் மீது தாக்குதல்- பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
அகர்தலா,

 திரிபுரா மாநில காங்கிரஸ்  தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். பிஷால்கர் என்ற இடத்தில் கார் சென்ற போது,  காங்கிரஸ் தலைவரின் வாகனத்தை சிலர் வழிமறித்து வாகனத்தின்மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலில் கார் கண்ணாடி சேதம் அடைந்தது. பிஜுஸ் காந்திக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநிலத் தலைவர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், நாளை திரிபுராவில்   12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.  இந்த தாக்குதலை பாஜகவினர் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
2. திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயன்றால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
பிரதமர் மோடி ஆட்சியில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
4. அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்
அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
5. அதிமுக-பாஜக தேர்தல் கூட்டணியை உறுதி செய்த ஜே.பி.நட்டா
தமிழக சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து சந்திக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.