தேசிய செய்திகள்

கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என்பதா? உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம் + "||" + Uddhav Thackeray Speech "Obnoxious": BS Yediyurappa As Border Row Erupts

கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என்பதா? உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்

கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என்பதா? உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்
மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதற்கு எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை, 

மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதற்கு எடியூரப்பா கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மராட்டிய எல்லையையொட்டி கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மராட்டியம், கர்நாடகம் இடையே பல ஆண்டு காலமாக தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதேபோல மராட்டிய ஏகிகாரன் சமிதி அமைப்பும் பெலகாவி உள்ளிட்ட சில பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்க போராடி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17-ந் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தியாகிகள் தினமான நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில், “ கர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்திற்கு கொண்டு வருவதுதான் மாநில எல்லை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். நாம் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். தியாகிகளுக்கு இந்த உறுதி மொழியுடன் மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். 

உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்தை கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா  கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் கருத்து இந்திய யூனியன் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் எடியூரப்பா சாடியுள்ளார்.மேலும், இணக்கமான சூழலை கெடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசுவதாகவும் எடியூரப்பா வேதனை தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்: உத்தவ் தாக்கரே
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2. காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை
காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
3. ராய்காட் போகர்பாடாவில், நவசேவா 3-வது கட்ட குடிநீர் திட்டம்; உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார்
ராய்காட்டில் உள்ள போகர்பாடாவில் நவசேவா குடிநீர் வினியோக 3-வது கட்ட திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் பன்வெலில் நடந்தது.
4. காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்காது : எடியூரப்பா
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
5. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை; கர்நாடக பா.ஜனதா அதிரடி உத்தரவு
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை