தேசிய செய்திகள்

குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு + "||" + 13 killed in truck accident in Gujarat - PM Modi announces Rs 2 lakh relief

குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத், அசாமில் மார்ச் 1-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. மராட்டியத்தில் இரும்பு ஆலையில் விபத்து - 38 தொழிலாளர்கள் படுகாயம்
மராட்டிய மாநிலத்தில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
3. 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்: பிரதமர் மோடி 7-ந்தேதி அசாம் பயணம்
2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி 7-ந்தேதி அசாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
4. துக்க வீட்டுக்கு சென்ற போது விபத்து: லாரி மீது கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு தாய் உள்பட 3 பேர் படுகாயம்
வில்லுக்குறி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
5. குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம்; வருவாய் அதிகாரி கைது
குஜராத்தில் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரி கைது செய்யப்பட்டார்.