தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி + "||" + India reports 10,064 new COVID19 cases, 17,411 discharges and 137 deaths in last 24 hours, as per Union Health Ministry

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,81,837 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,556 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 17,411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,28,753 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,00,528 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 18,78,02,827 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியா முழுவதும் நேற்று 7,09,791 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் 108 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ‘‘இந்திய-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்கப்படுமா?’’ - மத்திய மந்திரி பதில்
இந்திய-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்கப்படுமா? என்பது குறித்து மத்திய மந்திரி நித்யானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
3. ரஷ்யாவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 40.12 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 'அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்
"ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா என பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.