வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி


வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 19 Jan 2021 11:01 AM GMT (Updated: 19 Jan 2021 11:01 AM GMT)

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - “புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது. வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நூறு சதவிகிதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன். நமக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” என்றார்.

Next Story