பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா + "||" + Budget session: MPs to undergo Covid-19 test; arrangements made for families, staff
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
ஜனவரி 29 முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனவரி 29 முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:-மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் நடைபெறும்.
நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் அனுமதிக்கப்படுவர்” இவ்வாறு அவர் கூறினார்.