தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது + "||" + The 10th phase of negotiations on agricultural law has begun

வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பிரச்சனைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளபோதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாய சங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. விக்யான் பவனில் விவசாயிகள் பிரதிநிதிகள் - மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே 9 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா என எதிர்பார்ப்பில் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 39-வது நாளாக நடத்தி வருகின்றனர்.
4. பஞ்சாப்பில் பாஜக தலைவர் இல்லத்தின் முன்பாக மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றவர்களால் பரபரப்பு
பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
5. வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை - ப.சிதம்பரம்
வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.