மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு


மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு
x
தினத்தந்தி 20 Jan 2021 9:47 AM GMT (Updated: 20 Jan 2021 9:47 AM GMT)

மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.

மும்பை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பையில் சில விவசாய அமைப்புகள் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை போராட்டம் நடத்த உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. 25-ந்தேதி ஆசாத் மைதானில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எங்களது கட்சி தலைவர் சரத்பவார் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கிறார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் எங்களது கூட்டணி கட்சி தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story