தேசிய செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல் : பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்...! + "||" + Tamilnadu Assembly polls likely in April

தமிழக சட்டசபை தேர்தல் : பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்...!

தமிழக சட்டசபை தேர்தல் : பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம்...!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிடலாம் என கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் டிக்காராம் மீனா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்

கேரள சட்டசபை  தேர்தலை ஏப்ரல் முதல்  அல்லது ஏப்ரல் மத்தியில் நடத்த அந்த மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் மீனா தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளார். 

இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் மீனா கூறியதாவது:-

ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் வரை புனித ரம்ஜான் மாதம் நிகழவுள்ளதால் அதற்கு முன்பே தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்கும். மேலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் மே 4-ம் தேதி தொடங்கவுள்ளதால், வாக்குப் பதிவு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிடலாம் என அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் ; பிரதமர் மோடி - அமித் ஷா ஆலோசனையில் செய்யப்பட்டதா? மம்தா பானர்ஜி கேள்வி
அசாம் மூன்று கட்டங்களாகவும் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் என்றால், மேற்கு வங்காள தேர்தலை ஏன் எட்டு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றன என்று மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. சட்டசபை தேர்தல்: தமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்; வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முழு விவரம்....
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் .
4. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் -தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
5. வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி -தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கபடும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.