மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா: பரிசோதனையில் நெகட்டிவ் என தகவல்


மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா: பரிசோதனையில் நெகட்டிவ் என தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2021 3:09 PM GMT (Updated: 20 Jan 2021 3:09 PM GMT)

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். 

சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறலுடன், இருமல் மற்றும் லேசான காய்ச்சலும் இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஆன்டிஜென், ராபிட் கிட் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து சசிகலா செல்லப்பட்டார்.

வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார். இந்த உடல் நலக்குறைவால் அவரது விடுதலை தேதியில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறப்படுகிறது.

Next Story