சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது + "||" + When is the direct hearing in the Supreme Court? : Decision taken by 25th
சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது
சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது என்பது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது.
புதுடெல்லி,
கொரோனா காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
மராட்டிய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ஆன்லைன் விசாரணையில் சிக்கல் உள்ளது. நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி அசோக் பூஷண், சுப்ரீம் கோர்ட்டு நேரடி விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து ஜனவரி 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று தெரிவித்தார்.
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன், பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார்.
பழங்குடியினர் மற்றும் ஏழைகள் உள்பட மூன்று கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அது மிகவும் தீவிரமான விஷயம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.